/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியதுஜே.எஸ்., குளோபல் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ஜே.எஸ்., குளோபல் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ADDED : ஜூன் 02, 2025 12:20 AM

கள்ளக்குறிச்சி: ஜே.எஸ்., பள்ளி மாணவர்கள் கடந்த 3 வருடங்களாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவதாக தாளாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் செந்தில்குமார் கூறியதாவது:
பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக 10ம் வகுப்பு படித்த அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, பிளஸ் 2 துவங்கிய முதல் ஆண்டிலேயே பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுகின்றனர். அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு மொழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. நீட் - ஐ.ஐ.டி., மற்றும் ஜே.இ.இ., பயிற்சிகளும் கற்பிக்கப்படுகிறது.
குறிப்பாக, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியினை தடையின்றி, சரியாக உச்சரிக்கவும், பிழையின்றி எழுதவும் மொழி ஆய்வகங்கள், ரோபோடிக்ஸ் வகுப்புகள் உள்ளன.
இது தவிர, நவீன அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடத்திற்கு ஆய்வகமும், ஏராளமான புத்தகங்களுடன் நுாலகமும் உள்ளது.
மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்க இசை, கலை, நடனம், ஸ்கேட்டிங், கராத்தே, சிலம்பம் உட்பட பல்வேறு வகையான விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரையிலும், 11ம் வகுப்பிற்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இவ்வாறு செந்தில்குமார் தெரிவித்தார்.