/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூன் 21, 2025 11:44 PM
திருக்கோவிலுார் ; திருக்கோவிலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை 23ம் தேதி அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் சேர்க்கை நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் மகாவிஷ்ணு செய்திக்குறிப்பு:
திருக்கோவிலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மதிப்பெண், கட் ஆப் மார்க் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக மாணவர் சேர்க்கை நடந்தது. நாளை 23ம் தேதி பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பி.ஏ., ஆங்கிலம், தமிழ், பி .காம்., - பி.எஸ்சி., கெமிஸ்ட்ரி பாட பிரிவுகளுக்கு விண்ணப்பித்த பி.சி., - பி.சி.எம்., - எஸ்.சி.ஏ., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் நாளை 23ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.