/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முத்திரை தீர்வை இழப்பு கட்டணம் வசூல் முத்திரை தீர்வை இழப்பு கட்டணம் வசூல்
முத்திரை தீர்வை இழப்பு கட்டணம் வசூல்
முத்திரை தீர்வை இழப்பு கட்டணம் வசூல்
முத்திரை தீர்வை இழப்பு கட்டணம் வசூல்
ADDED : மார் 20, 2025 05:20 AM

சின்னசேலம்: சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்திய முத்திரை சட்டம் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் முத்திரைத்தீர்வை இழப்பு கட்டணம் வசூல் சிறப்பு முகாம் நடந்தது.
தனித்துணை கலெக்டர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம் முன்னிலை வகித்தார். சின்னசேலம் சார்பதிவாளர் எல்லைக்குட்பட்ட, 17 ஆவணங்களுக்கான முத்திரைத்தீர்வை இழப்பு கட்டணத்தை, ஆவணதாரர்களிடமிருந்து சார்பதிவாளர் ராமச்சந்திரன் வசூல் செய்து தீர்வு கண்டார். இதில் வருவாய் மற்றும் பத்திரப்பதிவு துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.