/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/அரசு மகளிர் பள்ளியில் விளையாட்டு போட்டி அரசு மகளிர் பள்ளியில் விளையாட்டு போட்டி
அரசு மகளிர் பள்ளியில் விளையாட்டு போட்டி
அரசு மகளிர் பள்ளியில் விளையாட்டு போட்டி
அரசு மகளிர் பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : ஜன 28, 2024 06:26 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி நேப்பால் தெரு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு டி.இ.ஓ.,க்கள் முருகன், ஆரோக்கியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை கீதா முன்னிலை வகித்தார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை கற்பகம் வரவேற்றார். பள்ளி உடற்கல்வி இயக்குனர் லட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி, செயலாளர் கிரிராஜுலு, துணை தலைவர் அப்துல் கலீல் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வக்குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். உதவி தலைமை ஆசிரியை வசந்தா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.