ADDED : ஜூன் 19, 2025 07:44 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி, சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
இதில் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளை பூசணி வைத்தும், நெய் தீபம் ஏற்றியும் பக்தர்கள் பரிகாரம் செய்தனர். மேலும் ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தன.