/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வள்ளலார் மன்றத்தில் சிறப்பு பிரார்த்தனைவள்ளலார் மன்றத்தில் சிறப்பு பிரார்த்தனை
வள்ளலார் மன்றத்தில் சிறப்பு பிரார்த்தனை
வள்ளலார் மன்றத்தில் சிறப்பு பிரார்த்தனை
வள்ளலார் மன்றத்தில் சிறப்பு பிரார்த்தனை
ADDED : ஜன 05, 2024 10:20 PM
சங்கராபுரம், : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார்.
ரோட்டரி தலைவர் நடராஜன்,அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சக்கரவர்த்தி, ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, இன்னர்வீல் கிளப் தலைவி கவுரி விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.
சமீபத்தில் மறைந்த வள்ளலார் மன்ற செயலாளர் நாராயணன், விஜயகாந்த் ஆகியோரது மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஜப்பான் நிலநடுக்கத்தில் 75 பேர் உயிர் இழந்த நிகழ்சிக்கு அஞ்சலி தெரிவித்தும், இது போன்ற இயற்கை பேரழிவுகள் நிகழாமல் இருக்க சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பேருராட்சி தலைவி ரோஜாரமணி தாகப்பிள்ளை, வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், வாசவி கிளப் தீபாசுகுமார், முர்த்தி, ஜெய்பிரதர்ஸ் விஜயகுமார், அரிமா மாவட்ட தலைவர் வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.