/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜைராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜை
ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜை
ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜை
ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜை
ADDED : ஜன 02, 2024 11:46 PM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழ் மற்றும் அட்சதைக்கு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.வருகிற ஜனவரி 22 ம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிேஷகம் விமர்சையாக நடக்கிறது.
கும்பாபிேஷக அழைப்பிதழ் மற்றும் அட்சதையை விசுவஹிந்து பரிஷத் மாநில ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி தலைமையில் நேற்று சங்கராபுரம் கொண்டு வரப்பட்டது.சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் ராமர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டு கும்பாபிேஷக அழைப்பிதழ் மற்றும் அட்சதைக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பின் கடைவீதி வழியாக ஊர்வலமாக திரவுபதி அம்மன் கோவிலை அடைந்தனர்.அங்கும் அழைப்பிதழ்,அட்சதைக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு பூஜையில் ராம பக்தர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக பங்கேற்றனர்.