Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு

கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு

கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு

கோவிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு

ADDED : மார் 22, 2025 03:58 AM


Google News
சின்னசேலம்: கூகையூர் கிராமத்தில் கோவில் கதவை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தில் ஏழு எல்லை காத்த மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 10:00 மணி அளவில் கோவிலை பூசாரி திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வெள்ளியால் ஆன உடுக்கை, வேல், பாத கவசங்கள் 2 என நான்கு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us