/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஸ்தம்பிப்பு! மருந்துகள் கிடைக்காததால் நோயாளிகள் பலரும் அவதிகள்ளக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஸ்தம்பிப்பு! மருந்துகள் கிடைக்காததால் நோயாளிகள் பலரும் அவதி
கள்ளக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஸ்தம்பிப்பு! மருந்துகள் கிடைக்காததால் நோயாளிகள் பலரும் அவதி
கள்ளக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஸ்தம்பிப்பு! மருந்துகள் கிடைக்காததால் நோயாளிகள் பலரும் அவதி
கள்ளக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஸ்தம்பிப்பு! மருந்துகள் கிடைக்காததால் நோயாளிகள் பலரும் அவதி
ADDED : பிப் 12, 2024 06:24 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலமாக வீடுகளுக்கு சென்று மருந்து வழங்குவது அடிக்கடி நிறுத்தப்படுவதால் நோயாளிகள் பாதிப்படைவது தொடர்ந்து வருகிறது.
கள்ளக்குறிச்சியில் தமிழக சுகாதாரத் துறை மூலமாக 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் கடந்த 2021-ம் தேதி ஆக.6-ம் தேதி துவக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள 750க்கும் மேற்பட்டவர்கள் இதில் பதிவு பெற்று, நேரடியாக வீடுகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு பயனடைந்து வந்தனர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பணியாளர்களை மூலமாக இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள், பெட்டியில் வைத்து வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி பகுதியில் நோயாளிகள் இதன் மூலமாக பயனடைந்து வந்தனர். ஆனால் ஒன்றிரண்டு மாதங்களுக்கு மட்டுமே செயல்பட்ட இந்த திட்டம், திடீரென பணியாளர்கள் பற்றாக்குறை, மருந்து வரத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்கள் கூறி, மருந்துகள் வழங்கப்படுவது நின்றுபோனது. இதுகுறித்து நாளிதழ்கள் செய்தி வெளியிட்டதன்பேரில் மீண்டும் இந்த திட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் செயல்பட துவங்கியது.
ஆனால் துவங்கிய ஒன்றிரண்டு மாதங்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருந்து இந்த திட்டம் தொடர்ந்து மருந்துகளை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்காமல் இருப்பதாக புகார்கள் வந்தது.
இதனால் மாதாந்திர மருந்துகள் வாங்க முடியாமல் வயதான நோயாளிகள் பலரும் கள்ளக்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரடியாக சென்று வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் இந்த திட்டம் தடைபட்டுபோனதற்கு என்ன காரணம் என பணியில் உள்ள மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆட்கள் பற்றாக்குறை, மருந்துகள் வரத்து குறைவு போன்ற காரணங்களால் மருந்துகள் வழங்குவதை தடைபடாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் மாவட்ட நிர்வாகமும் அரசின் சிறப்பு திட்ட செயல்பாடுகளை கண்காணித்து முறைப்படுத்திட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.