/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
ADDED : ஜன 08, 2025 08:23 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த கீழப்பாளையத்தை சேர்ந்தவர் பக்கிரிபிள்ளை, 70; விவசாயி. இவர், வெளியூர் சென்றுள்ளார்.
நேற்று காலை 10.15 மணியளவில் பக்கிரிபிள்ளையின் மனைவி அஞ்சலை, 65, வீட்டை பூட்டி விட்டு மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டி சென்றார்.
காலை 11.00 மணியளவில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அஞ்சலைக்கு தகவல் தெரிவித்தனர்.
அஞ்சலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவை உடைத்து 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
நகைகளை புடவைக்குள் வைத்திருந்ததால் தப்பின. எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.