/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மதகுகள், மதில்களை சீரமைக்க ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு மதகுகள், மதில்களை சீரமைக்க ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு
மதகுகள், மதில்களை சீரமைக்க ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு
மதகுகள், மதில்களை சீரமைக்க ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு
மதகுகள், மதில்களை சீரமைக்க ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : செப் 12, 2025 11:45 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக் காலத்திற்கு முன் நீர்நிலைகளில் உள்ள மதகுகள், பாலங்களின் மீதான சிறு மதில்களை சீரமைக்க அவசர கால நிதியாக ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்வளத்துறையின் விரிவான நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நீர்நிலைகளில் உள்ள மதகுகள் மற்றும் பாலங்கள் மீதுள்ள சிறு மதில்களை சீரமைக்க அவசர கால நிதியாக ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான திட்ட விளக்க கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள மதகு, பாலங்கள் மீதுள்ள சிறு மதில்கள் எண்ணிக்கை, பழுதடைந்துள்ள விவரம், துறை வாரியாக சீரமைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பருவ மழைக்கு முன்னதாக பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்வதுடன், பணிகளை முழுவதுமாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், உதவி பொறியாளர் விஜயகுமரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.