/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி சாலை மறியல் தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி சாலை மறியல்
தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி சாலை மறியல்
தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி சாலை மறியல்
தி.மு.க., பிரமுகர் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி சாலை மறியல்
ADDED : ஜூன் 08, 2025 03:58 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தி.மு.க., பிரமுகரை தாக்கியவர் மீது நடவடிக்கை கோரி, ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கராபுரத்தை சேர்ந்த கோதண்டபாணி மகன் தயாளன்,50; தி.மு.க., பிரமுகர். இவரது மனைவி சுதா பேரூராட்சி கவுன்சிலர். தயாளனுக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் லோகு என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், லோகு சரமாரியாக தாக்கியதில், தயாளன் காயமடைந்தார். தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புகார் அளித்த நிலையில், லோகு மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, தயாளன் ஆதரவாளர்கள் நேற்று மதியம் 12:00 மணிக்கு, மும்முனை சந்திப்பில் 'திடீர்' சாலைமறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
லோகுவை கைது செய்வதாக போலீசார் தெரிவித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.