/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம் உடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்
உடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்
உடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்
உடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 08, 2025 10:30 PM

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சியில் உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாலையோர மின்கம்பம் கடந்த சில மாதங்களுக்கு முன் உடைந்தது.
மின்கம்பத்தின் நடுப்பகுதி உடைந்து, சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசினாலோ அல்லது கனமழை பெய்தாலோ மின்கம்பம் முற்றிலுமாக உடைந்து சாலையில் விழ வாய்ப்புள்ளது.
இதையொட்டி, மின்கம்பத்தின் மேற்பகுதியில் கயிறு போட்டு, அருகில் உள்ள மரத்தில் கட்டியுள்ளனர். சாலையை ஒட்டியவாறு உள்ள கம்பத்தால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது. இதனால் உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைத்திட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.