/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சங்கராபுரத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம் சங்கராபுரத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
சங்கராபுரத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
சங்கராபுரத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
சங்கராபுரத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : செப் 11, 2025 11:01 PM

சங்கராபுரம்; சங்கராபுரம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சங்கராபுரம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பூட்டை ரோட்டில் நீர்வழி செல்லும் பாதை ஓடையை தனி நபர் ஆக்கிரப்பு செய்திருந்தார்.
அந்த இடத்தினை தாசில்தார் வைரக்கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் தலைமையில் மண்டல துணை தாசில்தார் பாண்டியன், வருவாய் அலுவலர் திவ்யா, சார் ஆய்வாளர் சுஜாதா முன்னிலையில் பொக்லைன் மூலம் நீர்வழி பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சமன் செய்தனர்.
வி.ஏ.ஓ., திவிகுமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர். சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.