ADDED : செப் 01, 2025 11:43 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வழக்கறிஞர் உதவியாளர் சங்க உறுப்பினரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் வழக்கறிஞர்கள் உதவியாளர் சங்க உறுப்பினர் பிரதாப் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் உதவியாளர் வெல்பர் நிதி ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, பிரதாப் மனைவி புஷ்பவள்ளியிடம் வழங்கினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரேம்நாத், இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரசன்னா, மேஜிஸ்திரேட் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திருக்கோவிலுார் வழக்கறிஞர்கள் உதவியாளர் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் கார்த்திகேயன் மற்றும் சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.