/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஒழுங்குமுறை விற்பனைகூட எடை பணி தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் ஒழுங்குமுறை விற்பனைகூட எடை பணி தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்
ஒழுங்குமுறை விற்பனைகூட எடை பணி தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்
ஒழுங்குமுறை விற்பனைகூட எடை பணி தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்
ஒழுங்குமுறை விற்பனைகூட எடை பணி தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 14, 2025 12:43 AM

திருக்கோவிலுார் : ஒழுங்குமுறை விற்பனை கூட எடை பணி தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூட எடைப்பணி தொழிலாளர் சங்கத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களின் முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலுார் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் கண்ணன், நாகராஜ், பழனி முன்னிலை வகித்தனர். முருகன் வரவேற்றார்.
சங்கத்தின் பொதுச்செயலாளர் சரவணன் பங்கேற்று, விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை சாக்கு மாற்றி எடையிட்டு ஏலத்திற்கு வைக்கும் எடை பணி தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம், மருத்துவ காப்பீடு, பணியின் போது உயிரிழந்தால் இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி போளூரில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பேசினார்.
திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூரில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செந்தில்முருகன் நன்றி கூறினார்.