ADDED : ஜூன் 14, 2025 01:08 AM
ரிஷிவந்தியம் : வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் இன்று நடக்க உள்ளதாக, வட்ட வழங்கல் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ள முகாமில், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், உறுப்பினர்கள் சேர்த்தல், நீக்குதல், முகவரி மற்றும் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், மொபைல் எண் இணைத்தல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.