/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிகை வழங்கும் பணிராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிகை வழங்கும் பணி
ராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிகை வழங்கும் பணி
ராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிகை வழங்கும் பணி
ராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிகை வழங்கும் பணி
ADDED : ஜன 08, 2024 06:07 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி, 21 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பத்திரிகை வழங்கும் பணி துவங்கியது.
அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்கிறது.
அதற்கான அழைப்பிதழ் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கும் வகையில் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக அழைப்பிதழ் பூஜை செய்யப்பட்ட அட்சதை அரிசி, ராமர் கோவில் படம் மற்றும் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கிட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் பணிகளை துவக்கினர்.
அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் பஜனை மடம் பகுதியிலிருந்து 21 வார்டுகளுக்கும் வழங்கும் பணி துவங்கியது.
பணிகளை ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன், நகர தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் சுப்ரமணி ஆகியோர் வீடுகள் தோறும் அழைப்பிதழ்களை வழங்கினர். முன்னதாக தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமாரிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
பணிகளில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருடன், விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.