/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்புமாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு
மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு
மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு
மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜன 25, 2024 04:30 AM

தியாகதுருகம் : தியாகதுருகம் பஸ்நிறுத்தம் அருகே தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தியாகதுருகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தண்டு வடம் பாதித்தோர் அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்று, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன், தண்டு வடம் பாதித்தோர் சங்க தலைவர் கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.