Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சங்கராபுரத்தில் தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம்

சங்கராபுரத்தில் தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம்

சங்கராபுரத்தில் தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம்

சங்கராபுரத்தில் தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம்

ADDED : மார் 23, 2025 09:45 PM


Google News
சங்கராபுரம: சங்கராபுரம் பகுதியில் தொடரும் திருட்டு சம்பவத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கூட்ரோடில் கடந்த ஜனவரி மாதம் வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலை கிரிவலம் சென்றவரின் வீட்டில் 10 சவரன் நகை திருடு போனது.

பிப்ரவரி மாதம் எஸ்.குளத்துார் கிராமத்தில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டும், 4 வீடுகளில் திருட முயற்சியும் நடந்துள்ளது.

கடந்த வாரம் பாச்சேரி கிராமத்தில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வெளியூர் சென்ற சமயம் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது.

இப்படி கடந்த 3 மாதங்களாக சங்கராபுரம் போலீஸ் சரகத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. திருட்டில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் தொடர் திருட்டில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us