ADDED : மார் 22, 2025 04:12 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சார்பில், சித்தலிங்க மடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், மாணவியர்விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியர் திருஞானம் வரவேற்றார். ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் உறுப்பினர் ராஜேஷ், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் காமராஜ் நன்றி கூறினார்.