ADDED : ஜூன் 17, 2025 09:49 PM
கள்ளக்குறிச்சி; சின்னசேலத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் 3வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாளை மறுதினம் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில், தமிழகத்தில் உள்ள வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லறை விற்பனை துறையை சார்ந்த முன்னணி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, தேவையான பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., மற்றும் டைலரிங் முடித்த இருபாலரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, கலந்து கொள்ளலாம்.
முகாம் மூலம் வேலை பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இலவசமாக நடைபெறும் முகாமில், தகுதியுள்ள வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.