/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம்'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம்
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம்
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம்
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம்
ADDED : ஜன 06, 2024 06:27 AM

கச்சிராயபாளையம் : வடக்கனந்தல் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
கச்சிராயபாளையம், வடக்கனந்தல் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் தனியார் மண்டபத்தில் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ஷர்வண்குமார் தலைமை தாங்கினார்.
சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லிஏஞ்சலா, பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதயசூரியன் எம்.எல்.ஏ., முகாமை துவங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமி வரவேற்றார்.
முகாமில் 13 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் அரங்கம் அமைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் தண்டபாணி, நகரச் செயலாளர் ஜெயவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.