ADDED : ஜன 02, 2024 11:45 PM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் மனவளகலை மன்றம் சார்பில் உலக அமைதி வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது.சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உலக அமைதி வேண்டி மன வளகலை மன்றம் சார்பில் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் மனவளகலை மன்றத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.உலக அமைதி வேண்டி நடந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சியில் 75 உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.