/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பூம்புகார் விருது பெற்ற சிற்ப கலைஞருக்கு பாராட்டு பூம்புகார் விருது பெற்ற சிற்ப கலைஞருக்கு பாராட்டு
பூம்புகார் விருது பெற்ற சிற்ப கலைஞருக்கு பாராட்டு
பூம்புகார் விருது பெற்ற சிற்ப கலைஞருக்கு பாராட்டு
பூம்புகார் விருது பெற்ற சிற்ப கலைஞருக்கு பாராட்டு
ADDED : செப் 24, 2025 06:33 AM

கள்ளக்குறிச்சி : பூம்புகார் மாநில விருது பெற்ற மரச்சிற்ப கைவினை கலைஞரை கலெக்டர் பாராட்டினார்.
தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மரச்சிற்ப கைவினை கலைஞர் முருகனுக்கு, பூம்புகார் மாநில விருதும், ரூ.50 ஆயிரம் காசோலை, 4 கிராம் தங்க பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கலெக்டர் பிரசாந்திடம் இந்த விருதினை காண்பித்து முருகன் வாழ்த்து பெற்றார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் கள்ளக்குறிச்சி மரசிற்பம் தயாரிப்போர் கைவினை தொழிற்கூட்டுறவு சங்கத் தலைவர் சிற்பி சக்திவேல் உடனிருந்தனர்.