/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கவிதை, கட்டுரை போட்டி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கவிதை, கட்டுரை போட்டி
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கவிதை, கட்டுரை போட்டி
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கவிதை, கட்டுரை போட்டி
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கவிதை, கட்டுரை போட்டி
ADDED : செப் 01, 2025 01:04 AM

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் திரு.வி.க., மற்றும் அன்னை தெரசா பிறந்தநாள் விழாவையொட்டி கவிதை, கட்டுரை போட்டிகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர், டீன் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். உதவிபேராசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
தமிழ்த்துறை தலைவர் பிரவீனா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், திரு.வி.க., வாழ்க்கை வரலாறு, தமிழ் பற்று, தமிழ்மொழிக்காக மேற்கொண்ட தொண்டுகள், அவர் எழுதிய நுால்கள் குறித்து பேசினர்.
அன்னை தெரசா போல நாம் அனைவரும் வாழ்நாளில் கருணை உள்ளத்தோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, நடந்த கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் தமிழ், ஆங்கிலம், வரலாறு துறைகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், உதவி பேராசிரியர்கள் பிந்து, பார்த்திபன், கோமதி, சுபலட்சுமி, பரசுராமன், நித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். வரலாறு துறை பொறுப்பாசிரியர் நிதிஷா நன்றி கூறினார்.