/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/உடலை சாலையில் வைத்து மறியல்; திருக்கோவிலூர் அருகே பரபரப்புஉடலை சாலையில் வைத்து மறியல்; திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
உடலை சாலையில் வைத்து மறியல்; திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
உடலை சாலையில் வைத்து மறியல்; திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
உடலை சாலையில் வைத்து மறியல்; திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
ADDED : பிப் 24, 2024 06:08 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தகராறில் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டியைச் சேர்ந்தவர் கம்ருதீன், 52 நேற்று முன்தினம் மணம்பூண்டி சுடுகாட்டு எரிமேடை அருகே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம், குலதீபமங்கலத்தில் அடக்கம் செய்வதற்காக உடலை எடுத்துச் சென்றனர். அப்போது, தனி நபருக்கு சொந்தமான நிலத்தின் வழியே செல்லக்கூடாது என சிலர் கூறியதால், உடலை மாலை 5:30 மணிக்கு மணலுார்பேட்டை - திருக்கோவிலுார் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மணலுார்பேட்டை போலீசார் மற்றும் திருக்கோவிலுார் தாசில்தார் மாரியாப்பிள்ளை, நிலத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரவு 7:00 மணிக்கு உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.