ADDED : ஜூன் 24, 2025 06:56 AM
கள்ளக்குறிச்சி : பெருமங்கலம் கிராமத்தில் சேதமான பழைய தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பெருமங்கலம் கிராமத்தை 16 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அளித்த மனு:
கள்ளக்குறிச்சி அடுத்த பெருங்கலம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது. தற்போது வீடுகளின் மேற்கூரை கான்கீரட் காரைகள் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது. இதனால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.
எனவே, அதிகாரிகள் வீடுகளை ஆய்வு செய்து, முற்றிலும் பழுதடைந்துள்ள வீடுகளை அகற்றி விட்டு புதிய வீடுகள் கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.