/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சி நகராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள்ளக்குறிச்சி நகராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ADDED : ஜன 06, 2024 05:04 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சியில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில், மகாலஷ்மி திருமண மண்டபத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமினை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் கடந்த டிச.19-ல் கண்ணன் மஹாலிலும், டிச.21-ல் வி.ஏ.எஸ்., திருமண மண்டபத்திலும் இரண்டு கட்டங்களாக மனுக்கள் பெறப்பட்டன.
மூன்றாம் கட்டமாக நகராட்சி 6,7,8,9,10,16 மற்றும் 17 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வருவாய் துறை அனைத்து சான்றுகள், மின் இணைப்பு பெயர் மாற்றம், சொத்து வரி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் இந்த முகாமினை ஆய்வு கலெக்டர் செய்தார்.
கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் மகேஷ்வரி, நகராட்சி பொறியாளர் பழனி, 6,7,8,9,10,16, 17 வார்டுகளின் உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.