/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மின்தடையை கண்டித்து மக்கள் சாலை மறியல் மின்தடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்
மின்தடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்
மின்தடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்
மின்தடையை கண்டித்து மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 13, 2025 04:03 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தில் கடந்த மூன்று தினங்களாக குறிப்பிட்ட பகுதிகளில் தொடர் மின்தடை நீடித்து வருகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று காலை 9:00 மணிக்கு திருக்கோவிலுார் - கண்டாச்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அரகண்டநல்லூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு வந்த உதவி மின் செயற்பொறியாளர் குமரேசன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக மின் தடையை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.