/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
ADDED : அக் 03, 2025 11:18 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது.
விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு நித்திய கால பூஜை, 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளிசபெருமாள், புஷ்ப வல்லி தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் யாகசாலையில் எழுந்தருளினர்.
அக்னி பிரதிஷ்டை, கலச ஸ்தாபனம், பெருமாளுக்கு பவித்ர மாலை சமர்ப்பித்தல், பூர்ணாகுதி, சாற்றுமறை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு சுதர்சன ஹோமம், பிரதான ஹோமங்கள், மகா சாந்தி ஹோமம், பூர்ணாகுதி, சாற்றுமறை நடந்தது.
ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின்பேரில், தேகளீச சுவாமி பக்த ஜனா சபா ஏற்பாட்டில், பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க விழா நடந்தது. வரும் 6ம் தேதி வரை நடக்கும் விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக புஷ்ப யாகம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பவர் ஏஜென்ட் கோலாகளன் செய்து வருகிறார்.


