ADDED : ஜூன் 10, 2025 10:10 PM

சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் அறுவடையை துவக்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து, இப்பகுதியில் அறுவடை செய்யும் வைக்கோலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.