ADDED : மார் 21, 2025 06:49 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரியாப்பிள்ளை,59; அரசு பஸ் டிரைவர். கடந்த, 2016ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதற்காக சிகிச்சை பெற்று முடித்த நிலையில், மீண்டும் அதே காலில் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனால்,
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவருக்கு
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.