/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஆம்னி பஸ் - வேன் மோதி விபத்து 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்ஆம்னி பஸ் - வேன் மோதி விபத்து 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்
ஆம்னி பஸ் - வேன் மோதி விபத்து 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்
ஆம்னி பஸ் - வேன் மோதி விபத்து 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்
ஆம்னி பஸ் - வேன் மோதி விபத்து 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்
ADDED : ஜன 01, 2024 06:00 AM

கள்ளக்குறிச்சி : கீழ்குப்பம் அருகே ஆம்னி பஸ், மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈயனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 43; டிரைவர். இவர் தனது மினி சரக்கு வேனில் கோழிகளை ஏற்றிக்கொண்டு வி.கூட்ரோட்டில் இருந்து அடரி நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றார்.வேனில் ஈயனுாரைச் சேர்ந்த வேல்முருகன், 40; மருதை, 53; ஆகியோர் சென்றனர்.
நள்ளிரவு 1:45 மணியளவில் கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிரே வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ், மோதி விபத்துக்குள்ளானது.
இதில், குமார், வேல்முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருதை, ஆம்னி பஸ் டிரைவர் நாகப்பட்டினம் மாவட்டம், அரும்பாக்கத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன், 29; மற்றொரு டிரைவர் காரைக்கால் சாலைப்பேட்டையைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் ஜெயசீலன், 33; பயணிகள் பெங்களூரு ஆர்.கே.புரம் ஸ்ரீநிவாஸ் மனைவி பிந்து, 48; ஜெயவேலு மனைவி தேவி, 68; வேல்முருகன் மகன்கள் தருண், 8; ஷாரன், 5; ஆகியோர் காயமடைந்தனர்.
கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களையும் உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.