ADDED : ஜன 10, 2024 11:27 PM
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி இறந்தார்.
தியாகதுருகம் அடுத்த மாடூர் சேர்ந்தவர் செல்வன்,74; இவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு இயற்கை உபாதை செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது சென்னை - சேலம் நோக்கி சென்ற ஈச்சர் லாரி செல்வன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.