/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சிக்னல் கிடைப்பதில்லை லோக்சபாவில் எம்.பி., பேச்சு பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சிக்னல் கிடைப்பதில்லை லோக்சபாவில் எம்.பி., பேச்சு
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சிக்னல் கிடைப்பதில்லை லோக்சபாவில் எம்.பி., பேச்சு
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சிக்னல் கிடைப்பதில்லை லோக்சபாவில் எம்.பி., பேச்சு
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சிக்னல் கிடைப்பதில்லை லோக்சபாவில் எம்.பி., பேச்சு
ADDED : மார் 21, 2025 06:53 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை என எம்.பி., பேசினார்.
கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் லோக்சபாவில் பேசியதாவது:
மத்திய அரசின் கீழ் இயங்கும் பி.எஸ்.என்.எல்., நெட்வெர்க் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. குறிப்பாக கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட கூளைமேடு, பைத்துார், வாழப்பாடி, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், கல்வராயன்மலை, திருமானுார், செந்தாரைப்பட்டி, பச்சமலை உட்பட பல்வேறு பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சிக்னல் குறைவாகவே உள்ளது. இதை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தேசிய ஊரகத்திட்டத்தின் நிலை, தமிழகத்தில் வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கை, இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.