/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாலையை ஒட்டிய நிழற்குடை வாகன ஓட்டிகள் அவதி சாலையை ஒட்டிய நிழற்குடை வாகன ஓட்டிகள் அவதி
சாலையை ஒட்டிய நிழற்குடை வாகன ஓட்டிகள் அவதி
சாலையை ஒட்டிய நிழற்குடை வாகன ஓட்டிகள் அவதி
சாலையை ஒட்டிய நிழற்குடை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 04, 2025 01:15 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சாலையை ஒட்டியுள்ள பயணியர் நிழற்குடையால், வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில தினமும் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. வாகன நெருக்கம் அதிகம் இந்த பகுதியில் சாலையை ஒட்டி, பயணியர் நிழற்குடை உள்ளது. அத்துடன் இங்கு சாலை ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளன.
இதனால் இந்த நிழற்குடை அருகே சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படும் போது, எதிர்திசையில் வரும் வாகனங்களை வாகன ஓட்டிகள் சரியாக பார்க்க முடிவதில்லை. இதன் காரணமாக, அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தில், அந்த நிழற்குடையை அகற்றி வேறிடத்திற்கு மாற்றி அமைத்திட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதற்கான அளவீட்டு பணிகள் துவங்கிய நிலையில், வேறெந்த பணிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதனால் நகரின் மையத்தில் அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ள பயணியர் நிழற்குடையை வேறிடத்திற்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.