/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வழிப்பாதை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வழிப்பாதை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வழிப்பாதை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வழிப்பாதை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வழிப்பாதை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 17, 2025 07:59 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் எவ்வித கண்காணிப்பும் இல்லாததால் வழிப்பாதை முழுதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு, 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலர் நாள்தோறும் கள்ளக்குறிச்சி நகருக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கூட்டமும் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பஸ் நிலைய உள்வழிபாதையின் ஓரத்தில் பழம், பூ, கீரை உள்ளிட்ட தற்காலிக கடைக்காரர்கள் வரிசையாக கடை அமைத்து ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதேபோல் வெளியே செல்லும் வழி முழுமையாக வரிசையாக கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பும், வெளியே பஸ் நிலைய முன்புறம் ஆட்டோக்கள், கடைகளின் ஆக்கிரமிப்புகள், அத்துடன் சாலையோரங்களில் வரிசையாக நிறுத்தப்படும் வாகனங்களினால் சாலைகள் அடைபட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, நடைபாதைகள் மற்றும் பஸ் நிலையம் வெளியில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள், வாகனங்களின் அணிவகுப்புகளை அகற்றி முறைப்படுத்திட மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.