ADDED : மே 31, 2025 12:52 AM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலுார் ஊராட்சியில், அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊராட்சியில் இருந்த பாழடைந்த குட்டையை சரிசெய்து, அதே இடத்தில் புதிய கிணறு வெட்டும் பணியை உடனடியாக தொடங்குமாறு ஊராட்சி தலைவரிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஊரில் உள்ள தெருக்கள் வழியாக நடந்து, மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், லா.கூடலுார் கிராமத்திற்கு வந்து செல்ல ஏதுவாக பஸ் வசதி ஏற்படுத்தப்படும், துணை சுகாதார நிலைய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டட பணிகளுக்கான பூமி பூஜை விரைவில் நடைபெறும் என தெரிவித்தார். அப்போது, தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், ஊராட்சி தலைவர் கேசவன் நிர்வாகிகள் உள்ளிட்டோார் உடன் இருந்தனர்.