Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மினி டிராக்டர் திருட்டு

மினி டிராக்டர் திருட்டு

மினி டிராக்டர் திருட்டு

மினி டிராக்டர் திருட்டு

ADDED : மார் 19, 2025 05:38 AM


Google News
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகில், 'மினி' டிராக்டர் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த எலியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் முருகேசன், 42; இவருக்கு சொந்தமாக குதிரைச்சந்தல் செல்லும் சாலையில் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் தனக்கு சொந்தமான 'மினி' டிராக்டரை வயலில் நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 12:00 மணி அளவில் வயலுக்கு சென்று பார்த்தபோது 'மினி' டிராக்டரை காணவில்லை.

இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us