ADDED : ஜன 02, 2024 11:46 PM
சங்கராபுரம் :
சங்கராபுரம் அருகே கட்டட தொழிலாளி இறந்தார்.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்தவர் மணி மகன் செந்தில், 49; கட்டட மேஸ்திரி.
இவர் நேற்று முன் தினம் வீட்டில் உள்ள பாத்ரூமில் தவறி விழுந்தார்.அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.