/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அம்மையகரத்தில் உறுப்பினர் சேர்க்கை ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அம்மையகரத்தில் உறுப்பினர் சேர்க்கை
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அம்மையகரத்தில் உறுப்பினர் சேர்க்கை
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அம்மையகரத்தில் உறுப்பினர் சேர்க்கை
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அம்மையகரத்தில் உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஜூலை 05, 2025 03:33 AM

கள்ளக்குறிச்சி: அம்மையகரத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், தி.மு.க., வினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கை நடத்தினர்.
சின்னசேலம் அடுத்த அம்மையகரம் சமத்துவபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தலைப்பில், தி.மு.க., வினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினர்.
மேலும், தமிழக அரசு திட்டங்களில் பயன்பெற்றவர்களா, அரசு திட்டங்கள் தேவைப்படுகிறதா என கேட்டறிந்து, சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
முதல்வர் ஸ்டாலின் புகைப்படம், ஓரணியில் தமிழ்நாடு என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர் வீடுகளில் ஒட்டப்பட்டது. பொதுமக்களிடம் 6 கேள்விகள் கேட்கப்பட்டு கையெழுத்து பெற்றனர்.
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், துணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், கிளை செயலாளர்கள் மாயகண்ணன், சிவஞானம், மாணவரணி துணை அமைப்பாளர் விஜய், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் சின்னதம்பி, பிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.