/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு வழங்க கோரி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு வழங்க கோரி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு வழங்க கோரி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு வழங்க கோரி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு வழங்க கோரி மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 27, 2025 02:21 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு வழங்க கோரி டாக்டர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பவானியின் அறைக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அத்துமீறி நுழைந்து அச்சுருத்திய தனியார் செக்கியூரிட்டி மேலாளர்கள் சதிஷ், குணசேகரன், ஆதவன் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் மருத்துவ மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ பணியாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் � நாத், பேராசிரியர் சரவணகுமாரி, டாக்டர்கள் காமராஜ், கணேஷ்ராஜா, சத்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் அனைத்து மருத்துவ பணியாளர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் அன்புகுமார், நேரு, மலர்கொடி, அன்பழகன், சக்திவேல், சாந்தி மற்றும் பேராசிரியர்கள், மருத்துவ மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் ஜெயசீலன் நன்றி கூறினார்.


