/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைதுஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
ADDED : ஜன 13, 2024 07:37 AM

கள்ளக்குறிச்சி: ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 5 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மாபுரத்தைச் சேர்ந்தவர் அழகேசன் மகள் சினேகா,23; இவர், சில தினங்களுக்கு முன் எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார்.
மனுவில், சின்னசேலம் அடுத்த வி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பூண்டி மகன் கோபி, 23; என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.80 ஆயிரம் பெற்றார். நீண்ட நாளாகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்திருந்தார்.
மனு மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்பேரில் கீழ்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் விசாரணை நடத்தினார்.
அதில், சினேகா மட்டுமின்றி வி.அலம்பளத்தை சேர்ந்த இளவேணி, பெத்தாசமுத்திரம் செல்வி, நைனார்பாளையம் சிக்கந்தர், சின்னசேலம் ரியாசுதின் என பலரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.68 லட்சம் வாங்கி ஏமாற்றியது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்த மோசடியில் ஈடுபட்ட கோபியை கீழ்குப்பம் போலீசார் நேற்று கைது செய்தனர்.