Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ செம்மண் திருட்டு ஒருவர் கைது

செம்மண் திருட்டு ஒருவர் கைது

செம்மண் திருட்டு ஒருவர் கைது

செம்மண் திருட்டு ஒருவர் கைது

ADDED : ஜூன் 07, 2025 10:13 PM


Google News
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே செம்மண் திருடிய நபரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கூத்தக்குடி பகுதியில் நேற்று காலை 11:00 மணிக்கு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கூத்தக்குடி ஏரிக்கரை வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 யூனிட் செம்மண் திருடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து லாரியை ஓட்டி வந்த சீனிவாசன் மகன் அருள்மணி,24; என்பவரை வரஞ்சரம் போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us