/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இறைச்சி கடைக்காரரை தாக்கியவர் கைது இறைச்சி கடைக்காரரை தாக்கியவர் கைது
இறைச்சி கடைக்காரரை தாக்கியவர் கைது
இறைச்சி கடைக்காரரை தாக்கியவர் கைது
இறைச்சி கடைக்காரரை தாக்கியவர் கைது
ADDED : ஜூன் 07, 2025 01:33 AM
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் இறைச்சி கடைக்காரரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் அடுத்த வாழவந்தான் குப்பத்தை சேர்ந்த குப்பன் மகன் ராம்குமார், 29; இவர் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே கோழி இறைச்சி கடை வைத்துள்ளார்.
இவரிடம் ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 31; என்பவர் இறைச்சி வாங்க சென்றார்.
அப்போது அவரிடம் பழைய பாக்கி கொடுக்குமாறு ராம்குமார் கேட்டார். அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் செங்கல்லால் ராம்குமாரின் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.