Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் 

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் 

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் 

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் 

ADDED : மார் 22, 2025 03:59 AM


Google News
கள்ளக்குறிச்சி: தாட்கோ மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார வளர்ச்சி கடன் பெற பதிவு செய்யலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திகுறிப்பு;

மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார வளர்ச்சி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயன்பெற 18 முதல் 55 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பெண்களாக இருக்க வேண்டும்.

சாதிச்சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, திட்ட அறிக்கை உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், 12 நபர்கள் குழுவில் செயல்பட்டு வருவதற்கான தீர்மானம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கான நகல் ஆகியவற்றுடன் www.tahdco.com என்ற இணையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us