/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/'நடப்போம்; நலம் பெறுவோம்' : கள்ளக்குறிச்சியில் நடைபயிற்சி'நடப்போம்; நலம் பெறுவோம்' : கள்ளக்குறிச்சியில் நடைபயிற்சி
'நடப்போம்; நலம் பெறுவோம்' : கள்ளக்குறிச்சியில் நடைபயிற்சி
'நடப்போம்; நலம் பெறுவோம்' : கள்ளக்குறிச்சியில் நடைபயிற்சி
'நடப்போம்; நலம் பெறுவோம்' : கள்ளக்குறிச்சியில் நடைபயிற்சி
ADDED : ஜன 09, 2024 01:09 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சுகாதார பணியாளர்கள் சார்பில் 'நடப்போம்; நலம் பெறுவோம்' நடை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முன் துவங்கிய நடை பயிற்சியை சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனர் ராஜா துவக்கி வைத்தார்.
துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் ஆறுமுகம், தொற்றா நோய் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலர்கள் பாலதண்டாயுதபாணி, சுரேஷ், மருத்துவ அலுவலர்கள் மணிரத்தினம், ஜெகதீஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
டாக்டர்கள் காந்திமதி, ஜெனிபர், ராகுல் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்து, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கினர்.


