ADDED : செப் 17, 2025 11:36 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ஏழுமலை, 52; கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 24ம் தேதி இரவு 10:00 மணிக்கு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மொபட்டில் சென்றார்.
வண்டிப்பாளையம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஏழுமலை ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஏழுமலையை, திருநாவலுார் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழுமலை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஏழுமலையின் மகன் ராஜா அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.