/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேக விழா தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேக விழா
தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேக விழா
தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேக விழா
தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேக விழா
ADDED : செப் 01, 2025 11:48 PM

கள்ளக்குறிச்சி: தச்சூரில் அபிராமி அம்பிகை உடனுறை அமிர்த கண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நா ளை மறுநாள் (4ம் தேதி) நடக்கிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் வயல்வெளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசர் உழவார திருக்கூடத்தினர் உழவார பணியில் ஈடுபட்டபோது, மண்ணில் புதைந்த நிலையில் ஆள் உயர சிவலிங்கம் மூன்றும், மற்றொரு சிவலிங்கமும் இருப்பது தெரியவந்தது. அவ்விடத்தில் கிராம மக்கள் சார்பில் கடந்த 2007ம் ஆண்டு, அபிராமி அம்பிகை உடனுறை அமிர்த கண்டேஸ்வரர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் துவங்கியது.
கடந்த 18 ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் மூலவர், அம்பாள், நந்தி, சண்டிகேஸ்வரருக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்தில் விநாயகர், முருகன், நவகிரகங்களுடன், 18 சித்தர்கள், கொடி மரம், பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பிரகாரத்தில் நிருதி விநாயகர், லட்சுமி ஹயக்கிரிவர், திருப்பதி வெங்கடேஸ்வரர், ராமர் பட்டாபிஷேகம், லட்சுமி, சுப்ரமணியர், சரஸ்வதி, கிருஷ்ணர், ஆஞ்சநேயர், வராஹி, ஐய்யப்பன், லட்சுமி நரசிம்மர், பள்ளி அறை, நடராஜர் சபை, அன்னபூரணி, காலபைரவர், ஆரூட சனிபகாவன், சூரியன், சந்திரன் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆக. 28ம் தேதி முளைப்பாலிகையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நாளை (3ம் தேதி) காலை 9:15 மணிக்கு, 63 நாயன்மார்கள், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை மறுநாள் (4ம் தேதி), 10:30 மணிக்கு கோவில் ராஜகோபுரம், மூலவர் விமானம், பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்மக்களுடன் இணைந்து கோவில் கும்பாபிஷேக குழுவினர் செய்துள்ளனர்.